ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி வேலை 2313 பணியிடங்கள்


ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி வேலை 2313 பணியிடங்கள்
x
தினத்தந்தி 13 Feb 2017 8:45 PM IST (Updated: 13 Feb 2017 1:37 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 313 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). தற்போது இந்த வங்கியில் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 313 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 606 பணியிடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 350 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 347 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-4-2017-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-4-1987 மற்றும் 1-4-1996 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரி வினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படு கிறது.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர்.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின் எக்ஸாம்) மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-3-2017-ந் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியில் இணையதளம் வழியே கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் :
6-3-2017-ந் தேதி

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : ஏப்ரல்29, 30 மற்றும் மே 6, 7-ந்தேதிகள்

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் : 4-6-2017

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.statebankofindia.com மற்றும் www.sbi.co.in ஆகிய இணையதள முகவரிகளை பார்க்கலாம்.

Next Story