கடந்த 2 நாட்களில் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 49 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாட்களில் 49 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்டம்– ஒழுங்கை பாதுகாக்க அந்தந்த மாவட்ட போலீஸ் நிர்வாகமும் சூழ்நிலைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கை கருத்தில் கொண்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடும், பிரச்சினைகளை தூண்டக்கூடும், கலவரத்தை தூண்டக்கூடும், சதிசெயலில் ஈடுபடக்கூடும் என்ற கோணங்களில் சந்தேகத்திற்கு இடமானவர்களை அடையாளம் கண்டு மாவட்ட போலீஸ் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 12 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் தங்கப்பாநகர் பாபு மகன் வினோத்குமார்(வயது23), வாலாந்தரவை முத்து மகன் அருண்(29), பட்டணம்காத்தான் ராம்நகர் மலைராஜ் மகன் பிரபாகரன்(30), வாலாந்தரவை பஞ்சவர்ணம் மகன் பாஸ் என்ற பாஸ்கரன்(32), பனைக்குளம் மேற்குத்தெரு உமர்கத்தா மகன் நாகூர்கனி(34), ராமநாதபுரம் அண்ணாநகர் நாகநாதன் மகன் ராமச்சந்திரன்(27), செந்தில்குமார் மகன் கார்த்திக்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
இதேபோல, வேந்தோணி முனியாண்டிபுரம் காலனி பாக்கியராஜ்(38), பட்டறை தெரு சங்கரமூர்த்தி மகன் ராஜேஷ்(22), காட்டுப்பரமக்குடி குமாரமுத்து மகன் ஆனந்தன்(25), கமுதி பசும்பொன்காலனி காளிமுத்து மகன் விஸ்கான் முனியசாமி(44), பசும்பொன் சொக்கலிங்கம் மகன் கண்ணன்(49), கொண்டுநல்லான்பட்டி வேலுத்தேவர் மகன் காளிமுத்து(42), அபிராமம் முகமது யாகூப் மகன் காதர்முகைதீன்(51), ராமேசுவரம் இந்திராநகர் மாடசாமி மகன் ராமு(57), கிழவன் மகன் முத்துராமலிங்கம்(53), ராமசாமி மகன் தர்மர்(50), தங்கச்சிமடம் முஸ்லிம்தெரு உமர்கான் மகன் அப்துல்ரகீம்(34), மாந்தோப்பு ராயப்பன் மகன் டெமாக்(25), மண்டபம் போஸ்ட்ஆபீஸ் தெரு கோட்டைமுனி மகன் ஜெகதீஸ்வரன்(46), மண்டபம் கிழக்குத்தெரு சீனிமுகம்மது மகன் முகம்மதுஅலி(23), காரான் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் கருப்பையா(33), எம்.பி.கே.வலசை வேலு மகன் ராஜா(55), அக்காள்மடம் வடக்கு மரிய செங்கோல்ராஜ் மகன் சீமான் டெனோசியஸ்(23), பாம்பன் தெற்குவாடி ராமச்சந்திரன் மகன் சின்னத்துரை(48), ஆதியூர் செல்லம் மகன் விஜயராகவன்(40), பரமணிவயல் செல்வரத்தினம் மகன் சரவணன்(45), பாண்டுகுடி முத்து மகன் வேலவன்(36), பனிச்சகுடி சந்திரபோஸ் மகன் ரமேஷ்குமார்(23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
49 பேர் கைதுஇதுதவிர, பாரனூர் ராமசாமி மகன் முருகானந்தம்(27), சேத்திடல் ஆறுமுகம் மகன் போஸ்(56), அரியான்கோட்டை ஆறுமுகம் மகன் ராஜேஸ்வரன்(40), ஆனந்தூர் தாமஸ் மகன் குமார்(27), புளியங்குடி கருப்பசாமி மகன் மோகன்ராஜ்(38), ஒருவானேந்தல் சித்திரமணியன் மகன் சத்தியகாந்தி(32), ஆணையூர் ஆறுமுகம் மகன் சண்முகம்(42), கீழத்தூவல் வேலுத்தேவர் மகன் கருப்பணன்(55) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சட்டம்–ஒழுங்கை கருத்தில் கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.