காலி குடங்களுடன் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் வழங்கக்கோரி வெவ்வேறு இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரகம்பட்டி,
தண்ணீர் இல்லை
கரூர் மாவட்டம் தேவர்மலை ஊராட்சி அய்யம்பாளையத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்காக 30 ஆயிரம் லிட்டர் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் 3 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் காவிரி குடிநீரும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று சீத்தப்பட்டியில் உள்ள திருச்சி- பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினம், பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் சந்தானச்செல்வன், சிந்தா மணிப்பட்டி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- பாளையம் சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொசூர் ஊராட்சி
இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கொசூர் ஊராட்சி, மேட்டூரில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் 80 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் குடிநீர் தேவையை போக்க அப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் 3 ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு காவிரி குடிநீரும் வழங்கப்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் திருச்சி- பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் குமாரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story