விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் மறியல்


விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2017 3:30 AM IST (Updated: 14 Feb 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினை:விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் மறியல்

 

விருதுநகர்,

விருதுநகரில் 20 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் நகரின் பல பகுதிகளில் குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று மாலை விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நகராட்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story