தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 14 Feb 2017 2:47 AM IST (Updated: 14 Feb 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமைச் செயலகத்துக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் வந்திருந்தனர்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பிற்பகல் 12.05 மணிக்கு வந்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இருந்தபடி சுமார் 25 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதன்பிறகு பிற்பகல் 1.05 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவருடன், அமைச்சர் மா.பாண்டியராஜன், எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோரும் வந்தனர். 

Next Story