ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினி திருட்டு


ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் காந்தி சாலை அருகே உள்ள சுண்ணாம்பு வீதியை சேர்ந்தவர் பத்மா (வயது 37). இவர் தையல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் திருமணம் கர்நாடக மாநிலம் மாலூரில் நடந்தது. இதற்காக அவர் வீட்டை பூட்டி விட்டு மாலூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று கா

ஓசூர்,

ஓசூரில் காந்தி சாலை அருகே உள்ள சுண்ணாம்பு வீதியை சேர்ந்தவர் பத்மா (வயது 37). இவர் தையல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் திருமணம் கர்நாடக மாநிலம் மாலூரில் நடந்தது. இதற்காக அவர் வீட்டை பூட்டி விட்டு மாலூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பத்மா வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பத்மாவிற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவை உடைத்து உள்ளே இருந்த 3½ பவுன் நகை, மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து பத்மா ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story