சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் உண்ணாவிரதம்


சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 Feb 2017 3:30 AM IST (Updated: 14 Feb 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி பாசிக் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

புதுவை அரசு நிறுவனமான பாசிக் பணியாற்றும் ஊழியர்களுக்கு 23 மாதங்களுக்கு முழு சம்பளமும், 30 மாதங்களுக்கு 40 சதவீத சம்பளமும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. இந்த சம்பளத்தை வழங்கவேண்டும், பாசிக்கிற்கு வாராக்கடனாக உள்ள சுமார் ரூ.10 கோடியை உடனே வசூல் செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைககள பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்துக்கு சங்க நிர்வாகிகள் அப்துல்லாகான், முத்துராமன், தரணிராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. செயல்தலைவர் நாரா.கலைநாதன் தொடங்கி வைத்தார்.

கலந்துகொண்டவர்கள்

ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, பாசிக் தொழிற்சங்க கவுரவ தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உண்ணாவிரத்தில் நிர்வாகிகள் குமரன், ராமமூர்த்தி, முகமது நபி, புண்ணியகோடி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிசேகம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


Next Story