தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையால் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது சேலத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி


தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையால் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது சேலத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2017 3:32 AM IST (Updated: 14 Feb 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அரசு நிர்வாகம

சேலம்,

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால், மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காது. அரசு பஸ்களை இயக்க டீசல் கிடைக்காது. கலெக்டர்களுக்கு வேலை இருக்காது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து முன்கூட்டியே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தால் இந்த சந்தேகம் மக்களுக்கு வந்திருக்காது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் நிலைப்பாடு. முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நல்லவர்கள் என மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அ.தி.மு.க.வில் தொண்டர்கள் அதிகளவில் உள்ளனர். நல்லவர் யாரோ? அவருக்கு மக்கள் ஆதரவு கிடைப்பது உறுதி. கவர்னர் சட்ட விதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக காலதாமதம் செய்யலாம் என நினைக்கிறேன். தமிழக அரசியல் நிலவரத்தில் மத்திய அரசு தலையிடுகிறதா? என்பது தெரியவில்லை.

இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.

இந்த பேட்டியின்போது, மாநகர் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர்கள் சுப்ரமணியன், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story