குறைதீர்க்கும்நாள் கூட்டம்: ரூ.7.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டும், புதிய ரேஷன்கார்டுகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டும் 390 மனுக்கள் வரப்பெற்றன.
நலத்திட்ட உதவிகள்
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான போட்டித்தேர்வில் வெற்றிபெற்ற 17 பேருக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும், பணியின்போது இறந்த சிறுமொளசியை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் விஜயகுமாருக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் விபத்து நிவாரண நிதிஉதவி மற்றும் ஈமச்சடங்கு நிதிஉதவியாக ரூ.5 லட்சத்து 2 ஆயிரத்துக்கான காசோலை, 5 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
தொடர்ந்து தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், காதோலிக் கருவி, மடக்கு குச்சி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தமாக 53 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்து 675 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, தொழிலாளர் ஆய்வாளர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மஞ்சள்நாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story