திருவையாறு அருகே கோஷ்டி மோதல்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் மீது வழக்கு


திருவையாறு அருகே கோஷ்டி மோதல்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Feb 2017 3:34 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே நடந்த கோஷ்டி மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவையாறு,

அரிவாள் வெட்டு

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறை வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் சகாதேவன், விக்னேஷ். அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்கள் பிரகாஷ், சரத்குமார், ரஞ்சித். இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திருச்சோற்றுத்துறை அருகே 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த மோதலில் இரு தரப்பினரும் உருட்டு கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பிரகாஷ் தரப்பை சேர்ந்த ரெங்கராஜ் (வயது29) என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதலை தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீசார் திருச்சோற்றுத்துறை பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக சகாதேவன், விக்னேஷ் ஆகியோர் உள்பட 6 பேர் மீது நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story