சம்பளம் வழங்காததை கண்டித்து சுகாதார பணியாளர்கள் 3 இடங்களில் வேலை நிறுத்த போராட்டம்

அரக்கோணம்,
அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று சுகாதார பணியாளர்கள் 162 பேர் அரக்கோணம் சுவால்பேட்டை, பழனிப்பேட்டை, ஜூப்ளி ரோடு ஆகிய 3 இடங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன், ஆய்வாளர் தேவராஜ், மேற்பார்வையாளர்கள் வனஜா, சம்சுதீன், கேசவன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.
போராட்டத்தில் இந்திய தொழிற்சங்க மைய கவுரவ தலைவர் ஏ.பி.எம்.சீனிவாசன், தலைவர் கே.ஏகாம்பரம், தொழிலாளர் முன்னேற்ற சங்க நகர தலைவர் டேவிட், அண்ணா தொழிற்சங்க தலைவர் எஸ்.கே.பாபு, சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story