அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு தேசிய கொடியுடன் முதியவர் போராட்டம்


அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு தேசிய கொடியுடன் முதியவர் போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் சக்தி கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.சுப்பராயலு நாயுடு (வயது 75). இவர், நேற்று காலையில் அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பாக தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

அரக்கோணம்,

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரக்கோணம் அருகே வளர்புரம் கிராமத்தில் உள்ள என்னுடைய நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா செய்து கொடுத்துள்ளனர். அதை உடனடியாக நீக்கி எனக்கு மாற்றித்தர வேண்டும். இது குறித்து கடந்த 8 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் சென்று மனு கொடுத்து உள்ளேன். அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலெக்டர் அலுவலகத்தில் 2 முறையும், அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பாக 2 முறையும் போராட்டம் நடத்தி உள்ளேன். போராட்டம் நடத்தும்போது பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்து விடுகின்றனர். அதன் பின்னர் எதுவும் செய்வதில்லை. தற்போது 3-வது முறையாக போராட்டம் நடத்துகிறேன். எனது நிலப்பிரச்சினைக்கு அரசு தீர்வு ஏற்படுத்தி தரவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story