குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.
தர்மபுரி,
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர் பிரச்சினை, மின்சார வசதி, தகனமேடை, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்றிதழ், இலவச தையல் எந்திரம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர்.
மேலும் 3 சக்கர வண்டி மற்றும் மின் மோட்டார் உடன் கூடிய ஸ்கூட்டர் கேட்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 311 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவியாக தலா ரூ.8 ஆயிரம் வீதம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகையாக 16 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் காளிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாப்பாத்தி, துணை கலெக்டர்கள் மல்லிகா, குப்புசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலாஹிஜான், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விமலாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story