நாகை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது


நாகை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2017 3:45 AM IST (Updated: 14 Feb 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்,

முன்எச்சரிக்கை நடவடிக்கை

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம் சாட்டி உள்ளார். இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக நாகை மாவட்ட பகுதிகளில் போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

22 பேர் கைது

இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூர் ஹஜீஸ் நகரை சேர்ந்த முகமதுசெய்யது (வயது37), ரெயிலடி வடக்கு புது தெருவை சேர்ந்த அன்னதாசன் (38), செம்பனார்கோவில் ஆறுபாதி மேட்டிருப்பு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (37), பரசலூர் கலைஞர் நகரை சேர்ந்த ராமதாஸ் (64), நாகையை அடுத்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்து (23), வலிவலம் ராதா நஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் (49), வேளாங்கண்ணி வேர்குடியை சேர்ந்த ஜோதிபாசு (42) ஆகியோர் உள்பட 22 பேரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். 

Next Story