குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா போராட்டம்


குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா போராட்டம்

அருமனை,

அருமனை அருகே தனியார் குடிநீர் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் உறிஞ்சி பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். எனவே, இந்த ஆலையை மூடக்கோரி நேற்று ஆலையின் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ரசல்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் ஸ்டாலின்ஜோஸ் முன்னிலை வகித்தார். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story