இந்தியாவில் உயர்கல்வி முறையில் மாற்றம் தேவை டெல்லி மேல்-சபை துணைத்தலைவர் குரியன் பேச்சு
இந்தியாவில் உயர்கல்வி முறையில் மாற்றம் தேவை என்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 125-வது ஆண்டு தொடக்க விழாவில் டெல்லி மேல்-சபை துணைத்தலைவர் குரியன் பேசினார்.
நாகர்கோவில்,
தொடக்க விழா
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 125-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் ஜி.தேவகடாட்சம் தலைமை தாங்கி பேசினார். சி.எஸ்.ஐ. பொருளாளரும், கல்லூரி தாளாளருமான வக்கீல் சி.ராபர்ட் புரூஸ் வரவேற்று பேசினார்.
போதகர் பிரகாஷ் நாயகம் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் எம்.எட்வின் ஞானதாஸ் கல்லூரி வரலாறு குறித்து பேசினார்.
குரியன்
டெல்லி மேல்-சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் விழாவை தொடங்கி வைத்தும், ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஸ்காட் அருங்காட்சியக கட்டிடத்துக்கான அடிக்கல்லை திறந்து வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் உயர்கல்வியில் மாற்றங்கள் தேவை. உயர்கல்வியில் நாம் அதிகமான சவால்களை சந்தித்து வருகிறோம். கல்வியின் தரம் குறைவாக இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறோம். கல்வியில் நம்மால் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்ட முடியவில்லை. சீனா, பிரேசில் போன்ற நாடுகள் இந்த விஷயத்தில் முன்னிலையில் உள்ளன.
உலக அளவில் முதல் 100 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் நம்மால் இடம்பெற முடியாதநிலைதான் இருந்து வருகிறது. எனவே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
கல்வி முறையில் மாற்றம்
தற்போது பிரிவினைவாதம், குறுகிய மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. சகிப்புத்தன்மை குறைவாக இருக்கிறது. ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் அதிக வளர்ச்சி பெற்றால் தான் இதுபோன்ற குறைபாடுகளை களைய முடியும். கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறு பி.ஜே.குரியன் பேசினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சி.எஸ்.ஐ. மாடரேட்டர் தாமஸ் கே.உம்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
பழைய மாணவன்
நான் இந்த கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, இந்த கல்லூரியின் பழைய மாணவன் என்கின்ற முறையிலும் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த கல்லூரியின் தாளாளர் ராபர்ட் புரூஸ் ஒரு கோரிக்கையை வைத்தார். குமரி மாவட்டத்துக்கு விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. சாலை போக்குவரத்தில் திருவனந்தபுரத்துக்கும், கன்னியாகுமரிக்கும் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பதற்காக ரூ.2,300 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மீதமுள்ள ரோடுகள் ரூ.1,000 கோடியில் வேலைகள் நடக்கிறது.
நீர்வழி போக்குவரத்து
இதுபோக நீர்வழி போக்குவரத்தை பொறுத்தவரையில் நமது நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கம் 101 புதிய நீர்வழித்தடங்களை அடையாளம் கண்டு நீர்வழி போக்குவரத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 2 நீர்வழித்தடங்கள் குமரி மாவட்டத்தில் இருக்கிறது. ஒன்று பழையாறு. அடுத்தது ஏ.வி.எம். கால்வாய். அதுமட்டுமல்ல. குமரி மாவட்டத்தில் ஒரு துறைமுகம் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக சென்னை வரைக்கும் கடல் வழியாக படகு போக்குவரத்துக்கு திட்டமிட்டிருக்கிறோம்.
அடுத்தபடியாக குமரி மாவட்டத்துக்கு இரட்டை ரெயில் பாதை தேவை. இரட்டை ரெயில் பாதை அமைந்தால்தான் அதிகப்படியான ரெயில்கள் நமது மாவட்டத்துக்கு வரமுடியும். ரூ.3,400 கோடியில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும், கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் இரட்டை ரெயில் பாதை அமைக்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதில் உள்ள பிரச்சினையை நீக்க மத்திய மந்திரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
கோரிக்கை
குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டம் இந்த 2½ வருடத்தில் கொண்டு வந்துள்ளோம்.
இந்த கல்லூரி சார்பில் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். 125-வது ஆண்டையொட்டி தபால் தலை வெளியிடவும், நிறைவு விழாவில் பிரதமர் அல்லது ஜனாதிபதியை அழைத்துவரும் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., சி.எஸ்.ஐ. பேராய நிர்வாகக்குழு செயலாளர் டாக்டர் பென்சாம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வக்கீல் சோபிதராஜ், டாக்டர் ராணி பெலிக்ஸ், டேவிட்ராஜ், பாஸ்டர்கள் ஜஸ்டின் தேவதாஸ், ஜான் சகாயம், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் லோகிதாஸ், ராபின்சன் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story