அரசு விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி
மும்பை, செம்பூரில் மாநில சமூகநலத்துறையின் மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 150 மாணவர்கள் தங்கி உள்ளனர்.
மும்பை,
மும்பை, செம்பூரில் மாநில சமூகநலத்துறையின் மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 150 மாணவர்கள் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல மாணவர்கள் சாப்பிட சென்றனர். அப்போது உணவில் பல்லி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் உணவை சாப்பிட மறுத்து உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர் ஒருவர் கூறும்போது, ‘விடுதியில் மிகவும் மோசமான உணவு பரிமாறப்படுவதாக ஏற்கனவே பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை’ என்றார்.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை உதவி ஆணையர் அவினாஷ் தேவ்சாட்வார் கூறினார்.

Next Story