மும்பை- லண்டன் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
மும்பை- லண்டன் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மும்பை,

வெடிகுண்டு மிரட்டல்
மும்பை செம்பூரை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் ரான்சிவ்ரே. இவரது நண்பர் சுவப்னில். இவர் லண்டனில் இருக்கிறார். சம்பவத்தன்று ஹர்ஷ்வர்தன் ரான்சிவ்ரேவை செல்போனில் தொடர்புகொண்ட சுவப்னில் லண்டனில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தான் சுற்றிப்பார்க்க சென்றிருந்தபோது, அங்கு வெளிநாட்டுக்காரர்கள் 2 பேர் காதலர் தினத்தன்று மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படும் விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக பேசிக்கொண்டதாக தெரிவித்து இருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹர்ஷ்வர்தன் ரான்சிவ்ரே உடனே துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம்8) விரேந்திர மிஸ்ராவை தொடர்பு கொண்டு இந்த வெடிகுண்டு தாக்குதல் மிரட்டல் குறித்து தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சகார் போலீசாரை உஷார் படுத்தினர். காதலர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் இன்று மும்பையில் இருந்து லண்டன் கிளம்பும் விமானத்தில் செல்லும் பயணிகளின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Next Story