காதலர் தினத்தை முன்னிட்டு தாலிக்கயிறு, மாலையுடன் இந்துமுன்னணியினர் வந்ததால் காதலர்கள் ஓட்டம் வேலூர் கோட்டையில் பரபரப்பு


காதலர் தினத்தை முன்னிட்டு தாலிக்கயிறு, மாலையுடன் இந்துமுன்னணியினர் வந்ததால் காதலர்கள் ஓட்டம் வேலூர் கோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு வரும் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக கூறி இந்து முன்னணியினர் தாலிக்கயிறு, மாலையுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் காதலர்கள் ஓட்டம் பிடித்தனர். காதலர் தினம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. க

வேலூர்,

காதலர் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டைக்கு வரும் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக கூறி இந்து முன்னணியினர் தாலிக்கயிறு, மாலையுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் காதலர்கள் ஓட்டம் பிடித்தனர்.

காதலர் தினம்

காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்ந்தனர். சிலர் தங்கள் காதலிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதற்காக காதலர்கள் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். அங்கு தங்கள் காதலை பகிர்ந்து கொண்டனர்.

பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றதைபோன்று ஏராளமான காதல் ஜோடியினர் வேலூர் கோட்டைக்கும் நேற்று காலை முதல் வரத்தொடங்கினர். அவர்கள் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் அமர்ந்து காதலர் தினத்தை கொண்டாடினர்.

ஓட்டம் பிடித்த காதலர்கள்

இந்த நிலையில் காதலர்தினம் தமிழக பண்பாட்டுக்கு எதிரானது என்றும் காதலர்தினம் என்ற பெயரில் பொது இடத்தில் அத்துமீறும் காதல்ஜோடிக்கு திருமணம் செய்து வைப்போம் என்று வேலூர் கோட்ட இந்து முன்னணி தலைவர் மகேஷ் அறிவித்து இருந்தார்.

அதன்படி காதலர்தினமான நேற்று இந்துமுன்னணி கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் தாலிக்கயிறு மற்றும் மாலையுடன் கோட்டைக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் கோட்டையில் இருந்து பல காதலர்கள் ஓட்டம் பிடித்தனர்.

வாக்குவாதம்

அவர்களை வழிமறித்து, நாங்கள் காதலர்களுக்கு எதிரியல்ல. காதலர்தினம் என்ற பெயரில் அத்துமீறுவதைதான் நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றனர். இதைத்தொடர்ந்து சில காதலர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இன்னும் சில காதலர்கள் இந்து முன்னணியினரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் நீங்கள் உண்மையான காதலர்கள் என்றால் இதோ தாலிக்கயிறு, மாலை. நீங்கள் தாலி கட்டிக்கொள்ளுங்கள் என்றனர். இதனால் காதலர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

பூங்காவுக்கு விடுமுறை

காதலர்தினத்தை முன்னிட்டு வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மேற்பார்வையில் போலீசார் கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே கோட்டை அருகே உள்ள பெரியார் பூங்கா பராமரிப்பு பணி காரணமாக நேற்று மூடப்பட்டு இருந்தது. இதனால் பெரியார் பூங்காவுக்கு வந்த காதல் ஜோடியினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story