திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் கே.எம்.ஜி.சுந்தரவதனம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் ம
குடியாத்தம்,
குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் கே.எம்.ஜி.சுந்தரவதனம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர் கோ.புருஷோத்தமன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் கலந்து கொண்டு 480 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை கலைவாணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் நேதாஜி நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் தமிழ்திருமால் தொகுத்து வழங்கினார்.
Next Story