புனலூர் – இடமன் இடையே அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயிலை இயக்கி அதிகாரிகள் ஆய்வு பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் நடந்தது
புனலூர்– இடமன் இடையே அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அகல ரெயில் பாதை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு 1903–ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்
செங்கோட்டை,
புனலூர்– இடமன் இடையே அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அகல ரெயில் பாதைநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு 1903–ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இந்த பாதை வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த வழித்தடத்தில் 106 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ரெயில்கள், கடந்த 2010–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20–ந் தேதியுடன் நிறுத்தப்பட்டன. மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்த இந்த வழித்தடம் ரூ.350 கோடியில் அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது.
அதிவேக ரெயிலில் ஆய்வுகடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த, இந்த அகல ரெயில் பாதை பணிகள் கடந்த மாதம் (ஜனவரி) இறுதி கட்டத்தை எட்டியது. வருகிற மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடித்து ஏப்ரல் மாதம் முதல் செங்கோட்டையில் இருந்து புனலூர் வழியாக கொல்லத்துக்கு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
புனலூர் முதல் இடமன் வரையிலான அகல ரெயில் பாதையில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்தன. இந்தநிலையில் புனலூர்– இடமன் இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதிதன்மை, பாதைகளின் தரம், சிக்னல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கண்காணிக்கும் அதிவேக சிறப்பு ரெயில் கொண்டு நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு ஆணையர்தென்னக ரெயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் மனோகரன், கோட்ட கூடுதல் மேலாளர் முரளி கிருஷ்ணா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிவேக ரெயிலை இயக்கி ஆய்வு நடத்தினர்.
செங்கோட்டை முதல் புனலூர் வரை உள்ள ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்வே பணிகளையும் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) ஆய்வு நடத்துகின்றனர். நாளை (வியாழக்கிழமை) செங்கோட்டை முதல் ஆரியங்காவு வரையிலான அகல ரெயில் பாதையில், அதிகவேக ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.
இந்த சோதனைகள் முழுவதும் முடிவடைந்து பிறகு இந்த பாதையில் ரெயில்களை இயக்கலாம் என்று பாதுகாப்பு ஆணையர் மனோகரன் சான்று வழங்குவார். அதன்பிறகு அகல ரெயில் பாதையில் ரெயில்கள் ஓட தொடங்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.