தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி,
தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூட்டம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையின் விரிவாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
மாசுகட்டுப்பாடு சார்பில் சிப்காட் ஏற்றுமதி மேம்பாட்டு தொழிற்பூங்கா நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. தண்டபாணி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அனுமதி அளிக்க கூடாது
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மேற்கண்ட தனியார் தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும், இது போன்ற தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருவதாகவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது இல்லை என்றும் புகார் கூறப்பட்டது. மேலும் இது போன்ற தொழிற்சாலை விரிவாக்கத்தின்போது மாசு குறித்த ஆய்வை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் முன்னிலையில் நடத்திட வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் தாசில்தார் ஐவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story