காதலர் தினம் மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் குவிந்தனர்


காதலர் தினம் மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.

மாமல்லபுரம்,

காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.

காதலர் தினம்

காதலர்களுக்காக போராடிய கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைன் நினைவாக, உலகம் முழுவதும் இளைஞர் சமுதாயத்தினர் ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதியை, காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்து காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். காலை 11 மணி முதல் சாரை, சாரையாக காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளிலும், பஸ்சிலும் வரத்தொடங்கினார்கள்.

சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் பல இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, குடைவரை மண்டபம், புலிக்குகை போன்ற இடங்களை சுற்றிப்பார்த்து, காதலார் தினத்தை கொண்டாடினர்.

பரிசு பொருட்கள்

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணலில் அமர்ந்து காதல் ஜோடிகள் முத்தங்களை பரிமாறி கொண்டனர். அச்சமின்றி பல காதல் ஜோடிகள் கைகோர்த்து கடல் தண்ணீரில் கால்களை நனைத்து ஆனந்தமாக பொழுதை கழித்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதம் பகுதியில் உள்ள கடைகளில் காதலர் தினத்தையொட்டி காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்த பரிசு பொருட்களை காதலிக்கு வாங்கி கொடுத்தனர்.

மேலும் காதலர்கள் தங்கள் காதலிக்கு பிடித்த சைவ, அசைவ உணவுகளை வாங்கி கொடுத்தனர். 

Next Story