சிகாரிபுரா அருகே மரத்தில் கார் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி 2 பேர் படுகாயம்


சிகாரிபுரா அருகே மரத்தில் கார் மோதி விபத்து; 2 வாலிபர்கள் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Feb 2017 2:06 AM IST (Updated: 15 Feb 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

சிகாரிபுரா புறநகர் பகுதியில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவமொக்கா,

சிகாரிபுரா புறநகர் பகுதியில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் மரத்தில் மோதியது

சிவமொக்கா புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலா கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). இவர் நேற்று முன்தினம் காலை அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான நிதின் (22), அக்‌ஷய் (21) ஆகியோருடன் சிகாரிபுராவில் உள்ள மற்றொரு நண்பரான ரோகன் (23) என்பவரது வீட்டிற்கு சென்று இருந்தார்.

இதையடுத்து அங்கிருந்து ஆகாஷ், ரோகன், நிதின், அக்‌ஷய் ஆகிய 4 பேரும் காரில் சிகாரிபுராவில் இருந்து சிவமொக்கா நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஆகாஷ் ஓட்டினார். அவர்கள் சிகாரிபுரா புறநகர் பகுதியில் அஞ்சனபுரா கிராமத்தின் வந்தபோது, ஆகாசின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடடினயாக விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காரின் இடிபாடுகளிடையே சிக்கி ஆகாசும், ரோகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் நிதினும், அக்‌ஷயும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிகாரிபுரா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி சிகாரிபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிகாரிபுரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story