போயஸ்கார்டனில் முக்கிய பிரமுகர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு முக்கிய பிரமுகர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு முக்கிய பிரமுகர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அந்த இல்லத்தில் வசித்து வருகிறார். ஜெயலலிதா மறைந்தாலும், அவரது வீட்டுக்கு முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, நேற்று மதியம் முதல் போயஸ்கார்டன் வேதா இல்லத்துக்கு முக்கிய பிரமுகர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. சாதாரண போலீஸ் பாதுகாப்பு மட்டும் தொடருகிறது.
முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடிப்படையினர் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் போயஸ் கார்டன் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாததால் மதியம் 12 மணிக்கு மேல் அவர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story