மாவட்டத்தில் சப்–இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்


மாவட்டத்தில் சப்–இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
x
தினத்தந்தி 15 Feb 2017 3:30 AM IST (Updated: 15 Feb 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பல இடங்களில் பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம்

மாவட்டத்தில் பணியாற்றி வந்த பல சப்–இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த லிங்கபாண்டியன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிலைய தனிப்பிரிவுக்கும்,

பரமக்குடியில் பணியாற்றி வந்த துரைராஜ் உச்சிப்புளிக்கும், கேணிக்கரையில் பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் உச்சிப்புளிக்கும், மதுரையில் பணியாற்றி வந்த லோகநாதன் ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த சிவசாமி ராமநாதபுரம் நகர் நிலையத்திற்கும்,

ஏர்வாடியில் பணியாற்றி வந்த கேத்ரின்மேரி பெருநாழிக்கும், மதுரையில் பணியாற்றி வந்த வசந்தகுமார் கீழக்கரைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பரமக்குடி

இதேபோல, ராமநாதபுரம் தனிப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த முத்துவெங்கடேஷ் நெல்லை மாவட்டத்திற்கும், உச்சிப்புளியில் பணியாற்றி வந்த வெங்கடேசபெருமாள் கோவை நகரத்திற்கும், கீழக்கரையில் பணியாற்றி வந்த கணேசமூர்த்தி கியூ பிரிவிற்கும், பரமக்குடி நகரில் பணியாற்றி வந்த செல்வகுமார் கியூ பிரிவிற்கும் மாற்றப்பட்டனர்.

ராமநாதபுரம் நகரில் பணியாற்றி வந்த ஜோதிமுருகன் மதுரைக்கும், பஜார் போலீசில் பணியாற்றி வந்த இசக்கிதுரை நெல்லை மாவட்டத்திற்கும், பரமக்குடி தாலுகாவில் பணியாற்றி வந்த சரவணன் கியூ பிரிவிற்கும், சாயல்குடியில் பணியாற்றி வந்த சுரேஷ்குமார் கியூ பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பிறப்பித்துள்ளார்.


Next Story