கிணறு தோண்டுவதில் பிரச்சினை: நடிகர் பாபுராஜூக்கு கத்திக்குத்து ஆஸ்பத்திரியில் அனுமதி
மற்றொருவரின் நிலத்தின் அருகே கிணறு தோண்டிய போது ஏற்பட்ட பிரச்சினையில், நடிகர் பாபுராஜூக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அடிமாலி,
நடிகர் பாபுராஜ்
நடிகர் மம்முட்டியுடன் கம்மத் மற்றும் கம்மத், செக்கண்ட் ஷோ, நாட்டி பிரபசர் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பாபு ராஜ். இவருக்கு சொந்தமான ‘ரிசார்ட்’ கேரள மாநிலம் கல்லார் பகுதியில் உள்ளது.
இங்கு தண்ணீர் தேவைக்காக ‘ரிசார்ட்’ அருகே ஒரு இடத்தை பாபுராஜ் வாங்கினார். அந்த இடத்தில் கிணறு தோண்ட தீர்மானித்தார். இந்த நிலையில் நேற்று அந்த இடத்தில் கிணறு தோண்டுவதற்காக தொழிலாளர்கள் வந்தனர். இதையறிந்த பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சன்னி என்பவர் கிணறு தோண்ட எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்தார்.
கத்திக்குத்து
தகராறு முற்றியபோது, ஆத்திரம் அடைந்த சன்னி, தனது கையில் வைத்திருந்த கத்தியால், பாபுராஜூவின் மார்பு மற்றும் கைகளில் குத்தி விட்டு தப்பிஓடி விட்டார்.
பலத்த காயம் அடைந்த பாபுராஜை, சிகிச்சைக்காக அருகில் இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் பாபுராஜ் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story