குளங்கள்-அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை


குளங்கள்-அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2017 3:05 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

குளங்கள்-அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

நாகர்கோவில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் வரலாறு காணாத வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. இதில் குமரி மாவட்டமும் விதிவிலக்கல்ல. குமரி மாவட்டம் இருபருவ காலங்களிலும் மழை கிடைக்கும் மாவட்டமாகும். ஆனால் சமீபகாலமாக கால மழை பொய்த்து வருகிறது. மாவட்டத்தில் நிலத்தடி நீர் இல்லை.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாகர்கோவில் நகராட்சியில் மாதம் ஒருமுறைகூட தண்ணீர் கிடைக்கவில்லை. பல ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு பதில் குளத்து நீர் நேரடியாக பம்ப் செய்து வினியோகிக்கும் கொடுமை நடைபெறுகிறது.

தமிழகத்தில் வறட்சி பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய அரசின் ஆய்வுக்குழு குமரி மாவட்டத்துக்கு வராமல் புறக்கணித்து விட்டனர். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரி இத்தொகுதியில் இருந்தபிறகும் எந்த அதிகாரியும் பார்வையிடாதது குமரி மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக அரசை வலியுறுத்தி வறட்சி நிவாரண பணிகளுக்கு சிறப்பு நிதி பெற்று போர்க்கால அடிப்படையில் குளங்கள், அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை, வாழை, நெல் மற்றும் பயிர்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story