குறுகலான சாலையில் சிக்கிய கன்டெய்னர் லாரி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குறுகலான சாலையில் சிக்கிய கன்டெய்னர் லாரி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே குறுகலான சாலையில் சிக்கிய கன்டெய்னர் லாரியால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருமனை,

கன்டெய்னர் லாரி

மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் கனரக வாகனங்கள் அருமனை, களியல் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று முன்தினம் இரவு கேரளாவில் இருந்து கார்களை ஏற்்றிய ஒரு கன்டெய்னர் லாரி நெல்லை நோக்கி புறப்பட்டது.

அந்த லாரி களியக்காவிளை, குழித்துறை, அருமனை வழியாக களியல் வந்தது. பின்னர், களியலில் இருந்து குலசேகரம் சாலைக்கு திரும்ப முடியாமல் சிரமம் ஏற்பட்டது. மேலும், மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வாக இருந்ததால் அந்த லாரியை களியலில் ஒதுக்கி விட்டனர். பின்னர், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் இணைப்பை துண்டித்து வாகனம் செல்ல உதவினர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் களியல் சந்திப்பில் குறுகிய சாலையில் கன்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பல மணி நேரம் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களின் உதவியுடன் பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டு மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த கன்டெய்னர் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

முறையான சாலை வசதி இல்லாத இடங்களில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story