மாவட்டம் முழுவதும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சசிகலா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நாமக்கல்,
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அ.தி.மு.க.வில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதையொட்டி பள்ளிபாளையம் பஸ்நிலையத்தில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மணி, பேங்க் கணேசன், அப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபா பேரவையினர்
இதேபோல பள்ளிபாளையம், பஸ்நிலைய ரோடு, ஒட்டமெத்தை, ஆவரங்காடு மற்றும் பல இடங்களில் தொகுதி ஜெ.தீபா பேரவை சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் தொகுதி ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன், துணை ஒருங்கிணைப்பாளர் ராசமாணிக்கம், நிர்வாகி சுப்ரமணி மற்றும் சக்திவேல், சவுந்திரராஜன், மணிகண்டன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேந்தமங்கலம் பஸ்நிலையம் அருகே ஜெ.தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் ஒன்றிய அமைப்பாளர் கணேசன், நகர அ.தி.மு.க. துணை செயலாளர் கென்னடி, நகர அவைத்தலைவர் நடராஜ் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேந்தமங்கலம் சட்டசபை உறுப்பினர் அலுவலகம் முன்பும் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதில் முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, துத்திகுளம் கணபதி, ஓய்வுபெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும்
நாமக்கல் மணிக்கூண்டு அருகே ஜெ.தீபா பேரவையின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜெ.தீபா பேரவை சார்பில் குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் முன்னாள் கவுன்சிலர் நடேசன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஆறுமுகம், ரமேஷ், அங்கப்பன், லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் ஜெ.தீபா பேரவையினர், சசிகலா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Next Story