இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மங்கல பொருட்களை வாங்க மறுத்து காதலர்கள் ஓடியதால் பரபரப்பு

கும்பகோணம்,

ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெறும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன்படி கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் காதலர் தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், கோவிலுக்கு வந்த காதலா்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் பாலா தலைமை தாங்கினார். நகர செயலாளா் குபேந்திரன் முன்னிலை வகித்தாா். புதுச்சோி மாநில தலைவா் மஞ்சினி மற்றும் பலர்் கலந்து கொண்டனா். மேலும் கோவில் வளாகத்தில் இந்திய கலாசாரத்தையும், பாரம்பாியத்தையும் பேணி காக்கும் வகையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்கு வந்த காதலர்களிடம் மங்கல பொருட்களை வழங்கினர். ஆனால் காதலர்கள் இந்த பொருட்களை வாங்க மறுத்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story