காதலர் தினத்தில் முக்கொம்பு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது


காதலர் தினத்தில் முக்கொம்பு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினமான நேற்று முக்கொம்பு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஜீயபுரம்,

முக்கொம்பு சுற்றுலா தலம்

திருச்சி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக முக்கொம்பு உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி ரசிக்கும் இடமாக விளங்குவதால் சிறந்த சுற்றுலாதலமாக கருதப்படுகிறது. இங்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

காதலர் தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் இன்றி முக்கொம்பு வெறிச்சோடி காணப்பட்டது. அதுமட்டுமின்றி காதலர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. காலை முதல் இளைஞர்கள் கூட்டம் தான் இருந்தது. பின்னர் நண்பகல் நேரத்தில் ஒரு சில காதல் ஜோடிகளை மட்டுமே காணமுடிந்தது.

களையிழந்த கடைகள்

காதலர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்த்து, அங்கு கடைவைத்திருந்தவர்கள் அதிக அளவில் தின்பண்டங்கள் வைத்திருந்தனர். ஆனால் குறைவான எண்ணிக்கையிலேயே வந்ததால் தின்பண்டங்கள் விற்பனையாகாமல் இருந்தன. சுற்றுலா தலத்திற்கு வந்த இளைஞர்கள் மற்றும் காதல் ஜோடிகளிடம் அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களுடைய பெயர், முகவரி, போன் நம்பர் போன்றவற்றை வாங்கிகொண்டு தான் உள்ளே செல்ல அனுமதியளித்தனர்.

சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், இந்த சுற்றுலா மையத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா தலம் களையிழந்து உள்ளது. இங்குள்ள நீர் வீழ்ச்சி, படகு சவாரி, சிறுவர் ரெயில் போன்றவற்றை முறையாக பராமரித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். 

Next Story