சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த விளம்பர பலகை வைக்க நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த விளம்பர பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
சீமைக்கருவேல மரங்கள்
தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நாகையில் கடந்த 12-ந்தேதி நாகை மாவட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் விடுமுறை தினங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. அதைதொடர்ந்து நாகை மாவட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து விழிப்புணர்வு விளம்பர பலகை வைக்கக்கோரி நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நில உரிமையாளர்களே முழுவதுமாக குறிப்பிட்ட தினங்களுக்குள் வேரோடு வெட்டி அகற்ற வேண்டும்.
விளம்பர பலகை
அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்களின் நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அரசே அகற்றி அதற்கான செலவின தொகையும், கூடுதலாக அபராத தொகையும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த விளம்பர பலகைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாகை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் தாலுகாக்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு விளம்பர பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story