தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

பால் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரையில் நடந்தது.

ஊத்தங்கரை,

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் தொகைகளை வங்கி கிளைகள் இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜா, பழனிவேல், பழனிசாமி, பிரகாஷ், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி பேசினார். இதில் ஆவின் பாலை பாதுகாத்திட வேண்டும், பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story