தாராவியில் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
தாராவியில் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். வாலிபர் மும்பை மாகிமை சேர்ந்தவர் முகமது இஸ்ரார் ஹஸ்மி (வயது27). இவர் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் தாராவியில் உள்ள சயான் – பாந்திரா இணைப்பு சாலையில் சென்று கொண்டிர
மும்பை,
தாராவியில் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
வாலிபர்மும்பை மாகிமை சேர்ந்தவர் முகமது இஸ்ரார் ஹஸ்மி (வயது27). இவர் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் தாராவியில் உள்ள சயான் – பாந்திரா இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தாராவி பீலாபங்களா பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார்சைக்கிள் சாலையில் சறுக்கியது.
இதில் முகமது இஸ்ரார் ஹஸ்மி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலிஅப்போது அந்த வழியாக சென்ற பெஸ்ட் பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார். பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். தகவல் அறிந்து வந்த தாராவி போலீசார் முகமது இஸ்ரார் ஹஸ்மியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.