சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை உறுதி: தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் தீர்ப்பு நாராயணசாமி கருத்து


சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை உறுதி: தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் தீர்ப்பு நாராயணசாமி கருத்து
x
தினத்தந்தி 15 Feb 2017 4:45 AM IST (Updated: 15 Feb 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை உறுதி: தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் தீர்ப்பு நாராயணசாமி கருத்து

புதுச்சேரி,

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது என்று முதல்– அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

சசிகலா மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சசிகலா உள்பட 3 பேரை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை ரத்து செய்து அவர்களுக்கு கீழ்கோர்ட்டு அளித்த 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை உறுதி செய்துள்ளது.

அரசியலில் திருப்புமுனை

கோர்ட்டு தீர்ப்பு விவரங்களை நான் முழுமையாக படிக்கவில்லை. சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரால் மறு சீராய்வு மனுதான் தாக்கல் செய்யமுடியும். தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இந்த தீர்ப்பு காரணமாக அவர் முதல்–அமைச்சர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைப்படியும், சட்ட விதிகளின்படியும் தண்டனை பெற்றவர்கள் முதல்–அமைச்சராகவோ, அமைச்சராகவோ பதவி வகிக்க முடியாது. சசிகலாவுக்கு அதுபோன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம் தற்போது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story