காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ரூ.5,912 கோடி நிதி ஒதுக்க மந்திரி சபை ஒப்புதல் மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா தகவல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ரூ.5,912 கோடி நிதி ஒதுக்க மந்திரி சபை ஒப்புதல் மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2017 1:44 AM IST (Updated: 16 Feb 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ரூ.5,912 கோடி நிதி ஒதுக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ரூ.5,912 கோடி நிதி ஒதுக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.

மந்திரி சபை கூட்டம்

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநில அரசு எல்லா முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு விதான சவுதாவில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மாநில சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ரூ.5,912 கோடி ஒதுக்க ஒப்புதல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்டும் பணிக்காக ரூ.5,912 கோடி நிதி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேகதாதுவில் 60 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கவும், அதன்மூலம் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், மகதாயி நதிநீர் பிரச்சினையில் விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story