திருவள்ளூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று கொண்டிருந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று கொண்டிருந்தது. அந்த பஸ் திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் அருகே சென்றபோது முன்னால் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற டிராக்டர் மீது மோதியது. இதனால் டிராக்டர் கவிழ்ந்து, அதில் இருந்த ஜல்லிக்கற்கள் சாலையில் கொட்டியது. மேலும், பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதில் பஸ்சின் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் விரைந்து சென்று டிராக்டரையும், சாலையில் கொட்டிய ஜல்லிக்கற்களையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story