ஆன்-லைன் மூலம் விபசாரம் கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது
மாதவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆன்-லைன் மூலம் விபசாரம் நடத்தியதை கண்டுபிடித்த போலீசார் கணவன்-மனைவி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
செங்குன்றம்,
மாதவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆன்-லைன் மூலம் விபசாரம் நடத்தியதை கண்டுபிடித்த போலீசார் கணவன்-மனைவி உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும், அங்கு இருந்த இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வீட்டில் விபசாரம்
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவன் கார்டன் பகுதியில் விபசாரம் நடப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ஜெ.சுப்பிரமணியம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பார்த்திபன் (வயது 22), அவரது மனைவி தனம் (22) மற்றும் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பூர் மாடுமா நகரை சேர்ந்த ஜோஸ்வா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் மீட்பு
மேலும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை போலீசார் மீட்டனர். போலீசார் பார்த்திபனிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து ஆன்-லைன் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், தனம், ஜோஸ்வா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் மயிலாப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். பார்த்திபனுக்கு வீடு வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர் கொரட்டூரை சேர்ந்த கஜபதி பிரீடம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story