கம்பத்தில் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தை நூதன முறையில் திருடும் கும்பல்


கம்பத்தில் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தை நூதன முறையில் திருடும் கும்பல்
x
தினத்தந்தி 16 Feb 2017 3:00 AM IST (Updated: 16 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கடைகள் மற்றும் மருத்துவமனைகள் முன்பு நிறுத்தி வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்களின் சக்கரத்தை நூதன முறையில் ஒரு கும்பல் திருடி செல்கிறது.

மோட்டார் சைக்கிளில் சக்கரம் திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் சுப்பிரமணியர் சுவாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜன் மகன் கர்ண மகாராஜா (வயது 33). இவர் நேற்று சிகிச்சைக்காக தனது மனைவி செண்பகத்துடன் அரசு தலைமை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவருடைய மோட்டார் சைக்கிளில் பின்பக்க சக்கரம் திருடு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அந்த சக்கரத்தை ஒரு கும்பல் பஞ்சர் பார்க்க கொண்டு செல்வதாக கூறி கழற்றி சென்றதாக தெரிய வந்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் கர்ண மகாராஜா புகார் கொடுத்தார். அப்போது நன்றாக தேடி பார்த்து விட்டு வருமாறு போலீசார் கூறினர்.

கண்காணிப்பு கேமரா

கம்பத்தில் கடந்த 2 மாதங்களில் உழவர்சந்தை, தனியார் ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்திருந்தத 10 மோட்டார் சைக்கிள்களின் பின்பக்க சக்கரத்தை மட்டும் குறி வைத்து ஒரு கும்பல் திருடி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தை திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே மோட்டார் சைக்கிளில் சக்கரத்தை திருடும் கும்பலை கண்டுபிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும். திருட்டு சம்பவத்தை தடுக்க நகரின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story