ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிப்பு
அரசியலில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணண் மகள் ஜெ.தீபாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
சிதம்பரம்,
அரசியலில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணண் மகள் ஜெ.தீபாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கடலூர் மேற்கு மாவட்ட ஜெ.தீபா ஆதரவாளர்களும், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து சிதம்பரம் வண்டிக்கேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் பாலசுப்பிரமணியன், பழனியாண்டி, மனோகர், கார்த்திகேயன், கணேஷ், நடராஜ், ஆனந்த், பிரேம்குமார், யூனூஸ், கார்த்திக், கண்ணன், உத்திராபதி, பட்டுசாமி, மற்றொரு கார்த்திக், அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணா நிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. முடிவில் கணேஷ் நன்றி கூறினார்.