கச்சிராயப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயப்பாளையம் கிராமம் காந்தி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோமுகி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் அப்பகுத
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயப்பாளையம் கிராமம் காந்தி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோமுகி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கச்சிராயப்பாளையம்–கள்ளக்குறிச்சி சாலையில் அக்கராயப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் சப்–இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நாளைக்குள்(அதாவது இன்று) குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.