வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்குவதற்காக வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் வறட்சி பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு பணி விவரங்களை பதிவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், வெள்ளகோவில், பச்சாம்பாளையம் ஊராட்சி மற்றும் நாகநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஓலப்பாளையம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சோளப்பயிர்கள், கொள்ளு, கருகிய தென்னை மரங்களையும், மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வறட்சியால் கருகிய தென்னை மரங்கள், சோளப்பயிர்கள், கண்வலி கிழங்குகள், பருத்தி செடிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும், தாராபுரம் பகுதிக்குட்பட்ட பகுதியில் பயிரிடப்பட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காசோளம், குடிமங்கலம் பகுதிக்குட்பட்ட பகுதியில் வறட்சியால் கருகிய தென்னை மரங்கள் மற்றும் உடுமலை பகுதியில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களையும் பார்வையிட்டார். விவசாயிகளிடம் நேரடியாக பயிர் சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின் போது தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஸ் பச்சாவு, வேளாண்துறை இணை இயக்குனர் ரங்கநாதன் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story