100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மேலும் 50 நாள் வேலை
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மேலும் 50 நாள் வேலை கலெக்டர் தகவல்
விருதுநகர்,
கிராமப்புற மக்களுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த வேலை நாட்கள் மேலும் 50 நாட்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
2016–17–ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் 32 மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கூடுதல் மனிதசக்தி நாட்கள் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் 100 நாட்கள் முடித்த குடும்பங்கள் மற்றும் தூய்மைகாவலர்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள 50 நாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.