கூட்டுறவு சங்க கிட்டங்கியில் தீ விபத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பருத்தி எரிந்து நாசம்
கொங்கணாபுரத்தில் கூட்டுறவு சங்க கிட்டங்கியில் தீ விபத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பருத்தி எரிந்து நாசம்
இடைப்பாடி,
கொங்கணாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கிளை இயங்கி வருகிறது. இங்கு வாரந்தோறும், பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் ஏலம் எடுத்த பருத்தி மூட்டைகளை வியாபாரிகள் பாதுகாப்பாக கிட்டங்கியில் (குடோன்) அடுக்கிவைத்து பின்னர் எடுத்துச்செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஏலம் விடப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகளை கிட்டங்கியில் அடுக்கி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இந்த கிட்டங்கியில் மின்கசிவின் காரணமாக திடீரென தீப்பொறி ஏற்பட்டு பருத்தி மூட்டைகள் தீப்பிடித்து புகை வந்துள்ளது. அதனை பார்த்தவர்கள் உடனடியாக இடைப்பாடி, சங்ககிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் உடனடியாக அங்கு வந்து தீயை அணைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து சங்க செயலாளர் ராமசாமி இடைப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இடைப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பருத்தி எரிந்து நாசம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. சேத விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story