திருவையாறு அருகே மின்கம்பம், மரத்தில் பஸ் மோதியது டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் காயம்
திருவையாறு அருகே மின்கம்பம், மரத்தில் பஸ் மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
திருவையாறு,
அரசு பஸ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து நேற்று காலை 10.50 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு திருவையாறு நோக்கி சென்றது. இந்த பஸ்சை உள்ளிக்கடை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன்(வயது32) ஓட்டி சென்றார். திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறை மேலத்தெருவை சேர்ந்த ரவி(45) என்பவர் கண்டக்டராக இருந்தார். திருப்பழனம் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மற்றும் தென்னை மரம் மீது பஸ் மோதி நின்றது.
சிகிச்சை
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த அண்டக்குடியை சேர்ந்த ராஜ்குமாரி(45), வைத்தியநாதன்பேட்டையை சேர்ந்த பிரகாஷ்(38), புத்தூரை சேர்ந்த பிச்சையம்மாள்(37), உமையாள்புரத்தை சேர்ந்த விஜயலெட்சுமி(40), கணபதிஅக்ரஹாரம் காணிருப்பை சேர்ந்த ராஜேஸ்வரி(16), விசலூரை சேர்ந்த கனகம்(83), சோமேஸ்வரத்தை சேர்ந்த தமிழரசி(52), பஸ் டிரைவர் கார்த்திகேயன்(32), கண்டக்டர் ரவி (45) ஆகிய 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில் ராஜகுமாரி, விஜயலெட்சுமி, பிச்சையம்மாள் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story