கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மீனவரை முதலை கடித்தது
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மீனவரை முதலை கடித்தது. முதலையின் பிடியில் இருந்து சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பின் அவர் தப்பி வந்தார்.
கும்பகோணம்,
மீன்பிடிக்க சென்றார்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அங்காளம்மன்கோவி்ல் தெருவை சேர்ந்தவர் சின்னக்கட்டார்(வயது80). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் சின்னக்கட்டார் அணைக்கரையில் மீன்பிடிக்க கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றார். அப்போது ஆற்றில் இருந்து வெளியே வந்த சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஆற்றங்கரை அருகே நின்று கொண்டிருந்த சின்னக்கட்டாாின் இடது கணுக்காலை கவ்விப்பிடித்து பயங்கரமாக கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த அவர் முதலையின் வாயில் இருந்து தனது காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முதலை மிகவும் பலமாக அவரது காலை கடித்து ஆற்றுக்குள் சின்னக்கட்டாரை இழுத்தது.
வலையை வீசினார்
சுமார் 1½ மணி நேரம் முதலையின் பிடியில் சிக்கி தவித்த அவர் அருகே தான் வைத்திருந்த மீன்பிடிவலையை எடுத்து முதலை மீது வீசினார். மீன்பிடிவலை தன் மீது விழுந்ததால் கவனத்தை இழந்த முதலை, சின்னக்கட்டாரின் காலை தனது பிடியில் இருந்து விடுவித்தது. இதனால் நொடிப்பொழுதில் முதலையின் பிடியில் இருந்து தப்பிய அவர் கரையில் தூரமான பகுதிக்கு விரைந்து சென்றார். முதலை கடித்ததில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
பின்னர் சின்னக்கட்டார் தனது மனைவியிடம் தன்னை முதலை கடித்தது குறித்து கூறினார். இதைத்தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னக்கட்டாருக்கு காலில் தையல் போடப்பட்டது. சின்னக்கட்டாரை இதற்கு முன்பு ஏற்கனவே 2 முறை ஆற்றில் வைத்து முதலை கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாா் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Next Story