கூடுவாஞ்சேரியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


கூடுவாஞ்சேரியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 Feb 2017 3:03 AM IST (Updated: 16 Feb 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27).

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). இவர் சாஜீதா (24) என்ற முஸ்லிம் பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் காதலர் தினமான நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மீன்சந்தை எதிரே அருண்குமார் நடந்து செல்லும் போது அவரை திடீரென தமிழ்செல்வன் என்ற வாலிபர் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story