பள்ளிகளுக்கு இடையேயான பகிர்ந்துணர்வு திட்ட நிறைவு விழா
குண்டலஅள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான பகிர்ந்துணர்வு திட்ட நிறைவு விழா
தர்மபுரி,
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் கிராமப்புற பள்ளிகள் மற்றும் நகர்ப்புற பள்ளிகளை இணைக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான பகிர்ந்துணர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகள் நகர்ப்புற பள்ளிகளுக்கும், நகர்ப்புற பள்ளி மாணவ-மாணவிகள் கிராமப்புற பள்ளிகளுக்கும் சென்று கல்வி தொடர்பான பகிர்ந்துணர்வில் ஈடுபடுகிறார்கள். இந்த திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடந்தது.
இந்த திட்டத்தின் நிறைவு விழா காரிமங்கலம் ஒன்றியம் குண்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவை உதவி தொடக்க கல்வி அலுவலர் பழனியம்மாள் தொடங்கி வைத்தார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன், ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் ஆசிரியர் பயிற்றுனர்கள் முனியப்பன், பரிதாபானு, மகேஷ் ஆகியோர் திட்டத்தின் செயல்பாடு குறித்து விளக்கி பேசினார்கள்.
இந்த விழாவையொட்டி பள்ளிகளுக்கு இடையேயான பகிர்ந்துணர்வு திட்டத்தின்படி மாணவ-மாணவிகள் 5 சுற்றுகளில் மேற்கொண்ட கல்வி பரிமாற்ற செயல்பாடுகள் மற்றும் மாணவ-மாணவிகள் உருவாக்கிய படைப்புகள் அடங்கிய கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை அளே தர்மபுரி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஊர்பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், திட்ட பொறுப்பாசிரியர் ராகவேந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story