ஓசூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


ஓசூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

சிறுமி பலாத்காரம்

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தானேகூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் ராம்லால். இவரது மகன் சுனில்பால்வர்மா(வயது 30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை கேண்டீனில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் தூக்கி சென்று அவர் பாலியல் பலத்காரம் செய்தார்.

இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து, சுனில்பால் வர்மாவை கைது செய்தார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி திருமகள் தீர்ப்பு வழங்கினார்.

7 ஆண்டு சிறை தண்டனை

அவர் தனது தீர்ப்பில், 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுனில்பால்வர்மாவிற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். 

Next Story